மறைவு

தமிழராய்ப் பிறந்து, இளமைக் காலத்தில் சிலநாள் ஆரிய இன வளர்ச்சிக்கட்சிக்காக (பேராயக் கட்சி) உழைத்து, பின்னர் அது ஒரு பார்ப்பன இனவெறி கொண்ட அமைப்பு என தெளிந்து – வெளியேறி, தனித்தமிழ் வளர்த்து திருக்குறளைப் பரப்பி, இந்தி எதிர்ப்புப் போரில் மும்முரமாக வடமொழியான இந்தியை எதிர்த்துப் போராடி

(அண்ணல்தங்கோவின் இந்தி எதிர்ப்புப் போரின் மும்முரமான செயல்பாட்டைக் காண, “தனித்தமிழ் இயக்கத் தந்தை மறைமலை அடிகள் வரலாறு” ஆசிரியர் : மறை திருநாவுக்கரசு எழுதிய நூலில் காணலாம்) நூற்றுக்கணக்கான தமிழ்த் திருமணங்களை தலைமை தாங்கி நடத்தி, வடமொழித் தாக்குதலிலிருந்து தென்மொழியான தமிழை காக்க ‘தமிழ்நிலம்’ எனும் தூயதமிழ் வார ஏட்டினை நடத்தி – தனித்தமிழ் என முழங்கிய (அண்ணல்தங்கோ 04.01.1994 ஆம் ஆண்டு) இச்செந்தமிழ் மண் விட்டகன்றார்.

 

தமிழுக்கு தமிழினத்திற்கு தன்னல் பாராமல், தம்மையே ஈந்து போராடிய அண்ணல்தங்கோவின் உடலை மண் தின்றுரிக்கலாம். ஆனால் எதிர்வரும் தமிழின வரலாற்றில் அவரின் நெடிய பங்களிப்பை, களச் செயற்பாட்டை எல்லாம் கரையவோ / மறையவோ செய்ய இயலா அளவிற்குத் தம்கால பதிவுகளை விட்டுச் சென்றுள்ளார் அண்ணல்தங்கோ.

 

அண்ணல்தங்கோ மறைந்த போது, பாவாணர் தன் கைபட எழுதிய இரங்கப்பாவை கீழே காண்கிறோம்.

 

தூய தமிழ்க் காவலர்

அண்ணல் தங்கோவை ஞா. தேவநேயன் பாடிய

இரங்கற்பா