தமிழக எல்லைத் தற்காப்பு மாநாடு

மொழிவழி மாநிலங்கள் ஏற்பட்டபின், தமிழகத்தின் சில எல்லைப் பகுதிகளை, அண்டை மாநிலங்கள் தத்தமது மாநிலங்களோடு இணைத்துக் கொள்ள முயன்றன. இம்முயற்சியை தடுக்கும் பொருட்டே, தம் சொந்த பொருட் செலவில் அண்ணல்தங்கோ, வேலூரில் ‘தமிழக எல்லைத் தற்காப்பு மாநாட்டினை’க் கூட்டினார்.

 

நாவலர் ச. சோமசுந்தர பாரதியார் சிறப்பு அழைப்பாளராகவும், பாரதிதாசன் சிறப்புப் பேச்சாளராகவும் கு.மு.அ அழைத்திருந்தார். அவர்களுடன் கலைஞர் கருணாநிதி, கி.ஆ.பெ.விசுவநாதம், திருக்குறள் முனுசாமி, டார்பிடோ ஜனார்த்தனம், கா. அப்பாதுரையார் போன்ற அறிஞர்கள் கலந்து கொண்டனர்