அண்ணல்தங்கோ எழுதிய திரைப்படப் பாடல்கள்

அண்ணல்தங்கோ அவர்கள், பராசக்தி, பெற்றமனம், பசியின் கொடுமை, கோமதியின் காதலன் போன்றத் திரைப்படங்களுக்கு திரைப்பாடல்கள் எழுதியுள்ளார்.

 

பாராசக்தி படத்தில் இறுதியாக முழங்கிடும்,

 

எல்லோரும் வாழ வேண்டும்

உயிர்கள் இன்புற்றிருக்க வேண்டும்

நல்லோர்கள் எண்ணமிதே முத்தம்மா

நல்லற வாழ்வும் இதே! (எல்லோரும் வாழ வேண்டும்)

 

கல்லாதார் என்றொருவர் நம்மிடையே

இல்லாமல் ஆக்க வேண்டும்

பொல்லாமை போக்க வேண்டும்

பொல்லாமை போக்க வேண்டும்

மனிதர்கள் கூட்டுறவாக வேண்டும்! (எல்லோரும் வாழ வேண்டும்)

 

இல்லாதாரை படைத்தான் என்றொருவன்

இருந்தால் அழியட்டுமே

இல்லார்கள் உள்ளாரென்றே முத்தம்மா

ஏன் இந்த வேற்றுமைகள்!

 

ஏ. பீம்சிங் இயக்கத்தில் உருவான ‘பெற்றமனம்’ திரைப்படத்தில், சீர்காழி கோவிந்தராசன் பாடிய

 

அன்புத்தோழா ஓடிவா! ஆசைத்தோழி ஓடிவா!

பண்பில் ஓங்கி வாழவே பாடி ஆடி ஓடிவா!

எனும் பாடலையும்

 

‘கோமதியின் காதலன்’ எனும் திரைப்படத்தில், ஜி. ராமநாதன் இசையில், திருச்சி லோகநாதன் பாடிய

 

தெள்ளித் தரும் தினைமா – முத்தம்மா

தித்திக்கும் நன்மலைத் தேன்!

அள்ளித் தரும் சருக்கரை – கற்கண்டும்

அன்புத் தமிழாமோ?

சொல்லினிற் தீரன் என்றும் – முத்தம்மா

வல்லினிற் சேரன் என்றும்

சொல்லித் திரிவதல்லால் – முத்தம்மா!

தொண்டென்ன செய்தோமடி?

முத்தெடுத்த தமிழர் – முத்தம்மா

மூடர்கள் ஆவோமா?

முத்தளித்தக் கடலை – பகைவர்

முற்றுகை போடுவாதோ?

 

என்ற பாடலையும் எழுதியுள்ளார்.

 

‘பசியின் கொடுமை’ எனும் திரைப்படத்தில் அனைத்து பாடல்களையும் அவரே எழுதியுள்ளார்.